Friday, February 24, 2012

Dinamalar Tamil Daily..speaks...




"பாரதி வழியை பின்பற்றுங்கள்'
மதுரை : "தேசபற்று மற்றும் தெய்வ பக்தியுடன் கூடிய ஒழுக்கம் இருந்தால்தான் தனி மனித வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். தேசபற்று மற்றும் தெய்வ பக்தி மிக்க பாரதியார் வழியை இளையோர் பின்பற்ற வேண்டும்,'' என சுவாமி சிவயோகாநந்தா வேண்டுகோள் விடுத்தார். 

சின்மயா யுவ கேந்திரா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா இனைந்து மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் ; "சன்ஸ்க்ருதி" என்ற இரண்டு நாள் நாடக விழா நடந்தது. சின்மயா யுவ கேந்திரா செயளாலர் மருதுராஜன்வரவேற்புரை நிகழ்த்தினார், சின்மய பாலவிஹார் மாணவிகள் விவேகா, அபிநயா இ‌றை வணக்கம் பாடினர். சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சென்னை மண்டல மேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சுவாமி சிவயோகாநந்தா பேசுகையில் : "தேசபக்தி மற்றும் தெய்வ பக்தி மூலம் நம் இதயத்தில் இடம் பெற்றவர் சுப்பிரமணிய பாரதியார். அவரது சுதந்திர வேட்கை கவிதைகள் உலகமே போற்றுகிறது. தேசபற்று இருந்தால் தனி மனித வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். பாரதியார் வழியை இளையோர் பின்பற்ற வேண்டும்,'' என்றார். மேலும், இரண்டு நாள் விழாவனது கனலும் அனலுமாக இருக்கும், என்றார். 

இவ்விழாவை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து நடத்திய சின்மயா யுவகேந்திரா, சுவாமி சின்மயாநந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இதில் தனது குரு சுவாமி சின்மயாநந்தர் ஒரு கனலாகவும், சின்மயா யுவகேந்திரா ஒரு அனலாக இருக்கும் என்றார்.இசைக்கவி ரமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாரதி-யார்? நாடகம் நடந்தது.சின்மயா யுவ கேந்திராவை சேர்ந்த செல்வி சுவேதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சின்மயா யுவ கேந்திராவை சேர்ந்த செல்வி நிவேதிதா நன்றி கூறினார். 

பிப்.,19 மாலை 6.15 மணிக்கு "சூர்யா 108" எனும் நாடகம் நடந்து.இரண்டாம் நாள் விழாவில் சின்மயா யுவ கேந்திராவை சேர்ந்த விலாசினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், செல்வி அனுத்தமா கடவுள் வாழ்த்து பாடினார், செல்வி நிர்மலாஸ்ரீ வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் துணை பொது மேலாளர் திரு.பெரியதம்பி கலந்து கொண்டார், வாழ்த்துரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் சுயநிதிப் பிரிவு இயக்குனர் திரு. கோபாலசுவாமி பேசினார். அதன் பிறகு 'சூர்யா 108' நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியின் முடிவில் சின்மயா யுவ கேந்திராவை சேர்ந்த செல்வன் சுந்தரமூர்ந்தி நன்றிவுரை நிகழ்த்தினார். 

'சன்ஸ்க்ருதி' என்ற இரண்டு நாள் நாடக விழா இனிதே முடிந்தது.இந்நிகழ்ச்சியில் சின்மயா யுவ கேந்திராவின் சென்னை மற்றும் தாமரைபாக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்களும் முக்கிய பங்குவகித்தனர். இதற்கு சின்மயா யுவ கேந்திராவின் மாநில அமைப்பாளர் திரு. சுதர்சன், பெரும் பங்கு வகித்தார். மதுரையில் சின்மயா யுவ கேந்திராவுடன் சேர்ந்து சின்மய யுவ வீர் இளைஞர்கள் செந்தில் மற்றும் நரேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு உருதுணையாக இருந்தனர். 

சின்மயா மிஷனின் ஆச்சாரியா தவத் திரு சுவாமி சிவயோகநந்தா இதற்கெல்லாம் பக்க பலமாகவும், அவருக்கு உருதுணையாக சின்மயா மிஷனின் உறுப்பினர்கள், மற்றும் மகளிர் குழுவின் உறுப்பினர்கள் இருந்தனர். இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் 26 இடங்களில் அரங்கேரியது, இதற்க முழு வழிகாட்டியாக திகழ்ந்தவர் தவத் திரு சுவாமி மித்ராநந்தா அவர்கள், இவர் சின்மயா யுவ கேந்ராவின் அகில இந்திய தலைவர் ஆவார். இளைஞர்களை ஆன்மீகத்தின் முலமாக நல்ல எண்ணங்களை மற்றும் ஒழுக்கத்தை வளர்ப்பதே இதன் நோக்கம் ஆகும்.

No comments:

Post a Comment